காதல் வானில் சிறகடிக்கும் மனச்சிறகுகள் -முஹம்மத் ஸர்பான்

நிலவுக்கோர் முத்தம் கொடுத்தேன்.
நாணத்தால் என் பின்னால் ஒளிகிறாள்.
அலைபேசியில் அவள் சுவாசம் கூட
ஆயிரம் கவிதைகள் பேசும் மெளனமாய்....,

களியாலான என் யாக்கையை
உளி எனும் நினைவுகளால் உடைக்கிறாய்.
அவள் இதழில் தான் புன்னகைக்கும்
சிரிப்புக்கும் வித்தியாசம் கண்டறிந்தேன்.

கடைக்கண்ணால் பார்க்காதே!!
அய்யோ..!!!இவள் பார்வைக்கு மருந்தென்ன.?
உன் இதழில் ஓர் மச்சமடி
நீ என் உயிரில் கலந்த எச்சமடி.

என் நிழலெனும் கண்ணாடியில்
உன் தெய்வீக முகத்தை காண்கிறேன்.
உன் காதலெனும் மனச்சோலையில்
நான் காதல் மலராய் பூக்கிறேன்.

தலை நிமிர்ந்து பாராத உன் முகத்தினில்
கவிதைகளில் பருக்கள் கொடுத்து ரசிக்கிறேன்
காலில் வெள்ளிக் கொலுசுகளை மாட்டிக்கொள்.
மெளனமெனும் இதழில் மனங்கள் மொழி பேச...,

இருளை விரும்பும் வெண்ணிலவைப் போல
கறுப்பு பாவாடை,தாவணி அவளுக்கு பிடிக்கும்.
அதனால் தான் என் முகத்தில்
வளர்ந்ததாடி மயிர் கூட கருமை என்பேன்.

காதலில் மெளனச் சங்கீத கலை பயின்றதால்
கானக மூங்கில் காடுகளும் தற்கொலை செய்தது.
உன் வியர்வை துடைத்து கை தவறிய
கைக்குட்டையும் நீ எனக்கு தந்த காதல் கடிதம் தான்.

என் இதயமெனும் ஆழக்கடலில்
நீந்தி விளையாடும் தங்கமீன் நீயே!!!
காதலெனும் பரந்த வானில் நேருக்கு நேர்
பறந்தாலும் மோதாத ஜோடிச் சிறகுகள் நாமே!!!!

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (12-Jul-15, 11:02 pm)
பார்வை : 488

மேலே