மனமே சொல்வாயா------------நிஷா
ஏதோ சொல்ல துடிக்குது மனசு
ஏனோ மெல்ல மறைக்குது இன்று
தெருவோரச் சருகோடு
தினம் பேசும் என் காதல்
நிதம் தீண்டும் தென்றலாய் உன்
நித்திரையோடு சிரிக்காதா...?
உருகி மருகி துடிக்குது மனசு
உண்மை பேச விரும்புது இன்று
மலரோடு முள்ளாக
மன்றாடும் என் காதல்...
மணம் வீசி அழகாக உன்
மடிமீது தவழாதோ...?
அன்பை சொல்ல விரும்புது மனசு
ஆறுதல் தேடி தவிக்குது இன்று
அரளிப்பூவை அள்ளியணைத்து
அழுது துடிக்கும் ஆசைக்காதல் உன்
அழகு நெஞ்சம் தொட்டு
ஆயிரம் கதைகள் சொல்லாதா.?