அலங்காரம் ஒன்றும் வேண்டாம் - என் அன்பான தேவதையே
என்னவளே ..
உன் பூ முகமது என்னில்
வண்ண வண்ண கனவுகள் தந்து போகிறது ....
உன் பேசும் விழிகள் இரண்டும் ....
என்னை பேசாமல் நிற்க வைத்து போகிறது
உன் காதோரம் விழுந்த கூந்தல் ....
என்னில் நூறு கவிதை தந்து போகிறது ...
அலங்காரம் ஒன்றும் வேண்டாம் - என்
அன்பான தேவதையே ..
உன் அன்பு ஒன்றே போதும்
உன்னை இன்னும் இன்னும்
அழகாய் காட்ட..