இன்றைய அரசியல்

நேற்று ஒரு கட்சியிலே வாக்கு கொடுப்பான்
இன்று ஒரு கட்சியிலே வாக்கை
நிறைவேற்ற இல்லையென நேற்றைய அவன் கட்சியை பழித்துறைப்பான்
நாளை ஒரு கட்சினிலே வாகு சேகரிப்பான்
நேற்றைய அவன் கட்சியில் கொடுத்த வாக்கெல்லாம்
இன்றைய கட்சியில் குறைகளாய் மாறி போகுதடா !
குறையே இவன் தான் என தெரியாத
மக்கள் உள்ளம் திரும்ப திரும்ப
அவனையே நாடுதடா !
உண்மையை கூறினாலும் பணத்தை வாங்கி
நல்லவர்களையும் உலகம் பகைக்குதடா !
அவன் மாடி மாடியாய் கட்டத்தான்
மயக்குகிறான் என கூறினால்
என்னையும் முறைக்குதடா .
என்றைக்குதான் முடியுமோ இந்த கொள்ளையர்களின் கூட்டாச்சி
வாரி வாரி கொடுத்த
மன்னர் ஆட்சி கூட மீண்டும்
வந்தால் அதுவே ஒரு கண்காட்சி

எழுதியவர் : சதீஷ் ஏ (22-Apr-14, 11:28 am)
சேர்த்தது : Tamilsathish
Tanglish : indraiya arasiyal
பார்வை : 265

மேலே