===+++குழந்தைகள் யோகிகள்+++===

குழந்தைகள் யோகிகள்
கள்ளம் கபடம் அறியாதவர்கள்...

மகிழ்ச்சியில் சிரிக்கும்
துன்பத்தில் அழுகும்
உன்மையான உணர்வின் வெளிப்பாடுகள்...

சுயநலமற்ற நிலா சூரியன்கள்...

இன்றைக்கும் என்றைக்கும் - இந்த
மானுடத்தின்
நிரந்தர எடுத்துக்காட்டுகள் - வாழ்க்கையின்
துருப்புச்சீட்டுக்கள்....

ஒட்டுமொத்த பிரிவினைகளுக்கும்
வக்கிரங்களுக்கும் அப்பாற்பட்டு:
நிலுவையுலகை மாற்றும்
வல்லமை கொண்டவர்கள்...

குழந்தைகள் யோகிகள்
கள்ளம் கபடம் அறியாதவர்கள்...!!!


-----------------நிலாசூரியன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர். (22-Apr-14, 2:18 pm)
பார்வை : 603

மேலே