தேநீரில் விழுந்த தேவதை
தேவதை தவறி
தேநீர் கோப்பாயில்
விழுந்தாள் ;
தேநீர் மறந்து
தேவதையை
பருகித் தொலைத்தேன் ;
மாவிலையொன்று
தேயிலைக்குள்
மறைந்தது ;
தேயிலையெல்லாம்
என் வீட்டுத்
தோரணமானது;
அருகில் வருகிறாள்
தாய் மொழி மறந்தது ;
மெழுகாய் சிரிக்கிறாள்
உயிர்ப்பூ மலர்ந்தது ;
ஆம் மலர்ந்தது .