காகத்தின் நட்பு

பச்சை பசேலென எப்போதும் பறவைகளின் கீச் கீச் என்ற சத்தத்துடன் ஒரு அடர்ந்த காடு.

இந்த காட்டிலே ஒரு காகமும் கொக்கும் இணை பிரியா நண்பர்கள் .இரவு ஆனால் காக்கை தன் வீட்டிற்கும் கொக்கு தன் வீட்டிற்கும் சென்று விடும்.
பகலிலே கதிரவன் தன் கண்களை திறந்தவுடன் இரண்டும் ஆடி பாடிக்கொண்டு காட்டின் நடுவே உள்ள குலத்திற்கு செல்வது வழக்கம் .கொக்கு இந்த குளத்தில் உள்ள மீன்களை உண்பதற்காக
அங்கு செல்லும்.

காக்கை கொக்கிற்காக அங்கு உள்ள மரத்திலே அமர்ந்து கொள்ளுமாம் ...

இப்படியாக சில காலங்கள் சந்தோசமாக கொக்கும் காக்கையும் திரிந்தன ..

ஒரு நாள் கொக்கு மீனின் வரவை எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்தது காகம் கொக்குவையே பார்த்து மரத்திலே அமர்ந்திருந்தது ....

அப்போது அந்த வழியாக வந்த வேடன் கொக்கின் மீது அம்பை எய்தான் ....பஞ்சு போன்ற கோக்கினால் அந்த அம்பின் வலி தாங்க இயலாமால் கீழே விழுந்தது ...

அதை பார்த்த காகம் மின்னல் போல் பறந்து வந்து அந்த கொக்கை தன் வாயால் எடுத்து பறக்க முயன்றது இதனை கண்ட வேடன் தன் அம்பை அதன் மீதும் எய்தினான் ...காக்கையும் கீழே விழுந்தது ஆனால் கொக்கை விடவும் இல்லை .......
மீண்டும் எழுந்து பறந்தது ...மீண்டும் வேடன் தன் அம்பை எய்த காகம் மீண்டும் விழுந்து பறந்தது ..அந்த கொக்கை மட்டும் கீழே விடவே இல்லை ...

இப்படியாக ஒரு மூன்று முறை அதனை பிடிக்க முயன்ற வேடன் நான்காவது முறை வென்றான் ...ஆனால் அந்த காகமோ
கொக்கை விடவே இல்லை ...
இதன் அன்பையும் நட்பையும் புரிந்து கொண்ட வேடன் கொக்கையும் காகத்தையும் எடுத்து சென்று சில மூலிகை மறந்து எல்லாம் அளித்து கொக்கையும் காகத்தையும் குணப்படுதினான்..
பிறகு அந்த காகமும் கொக்கும் வழக்கம் போல் சந்தோசமாக திரிந்தன .......



------------நட்பின் அருமையும் அன்பின் தன்மையும் இங்கு விளக்கி உள்ளேன் ------------------

எழுதியவர் : சதீஷ் ஏ (22-Apr-14, 2:58 pm)
Tanglish : kagathin natpu
பார்வை : 360

மேலே