மழைக்காதலன்

இனிமையான உன் தூரல் பார்வையால்
என் தோள்கள் இதமாய் இசை பாட !
இசையின் ஒலியிலே என் இமைகள்
இதமாய் கவி பாட !
கவியின் இனிமையிலே என் கண்கள்
அழகாய் நடனமாட !
நாட்டியத்தின் அழகினிலே
என் நெஞ்சம் நிலை தடுமாற !
உன் மின்சார மின்னலின் பார்வையிலே
என் கண்கள் நிலைமாற !
உன் கடிகார இடியின் ஓசையினிலே
என் செவிகள் மென்மையாய் மாற !
என் பிஞ்சு நெஞ்சை உன்னிடம் பறி கொடுத்தேன்
பாவியேன் !!!!!!!

எழுதியவர் : சத்தீஷ் ஏ (7-May-14, 11:36 am)
சேர்த்தது : Tamilsathish
பார்வை : 87

மேலே