வாய்மை பயக்கும் பொய்மை
சொன்னதிலே உண்மை இல்லையா? ஆயினும்
உன் சொல்லதனில், நன்மை உள்ளதா?
வாய்மை இல்லாத சிலதும் கூட நன்மை தரும் அடுத்தவர்க்கென்றால்
பொய்மை சொல்லவும் நீ துணிந்திடலாம், தயங்காமல் சொல்லிடலாம்
குறள் வரியும் வலியுறுத்துவது சில பாக்களிலே இந்த கருத்தையே
போர் முனையில், தர்மனும் பொய் சொன்னான்
அசுவத்தாமன் இறந்ததாக, தர்மம் ஜெயிப்பதற்க்கே
சொன்னதிலே உண்மை இல்லையெனினும்
சொல்லதனில் நன்மை இருந்தால், சொல்லிடலாம் நீயும் பொய்மையே