சின்ன சில ஆசைகள்

சின்ன சில ஆசைகள் எம் மனசுக்குள்ளே
ஏன் ஓசை எழ வில்லை? அதை சொல்லிடவே
சொல்லி, சொல்லி ஆண்டவனிடம் அலுத்து விட்டேனோ?
சொல்லாமல் அறிவான் என்று நினைத்து விட்டேனோ?

என்னை போலவே நினைக்கும் ஓருயிரை, தேடி விட ஆசை
அந்த ஓருயிருடன், நான் நட்பினிலே கலந்து விட ஆசை
துன்பம் சில வேளையில் தாக்கிடும் போது
அவர் தோள் சாய்ந்து அழுது தீர்த்திட ஆசை
நட்பில் மனம் மகிழ்ந்து சேர்ந்து சிரித்திட ஆசை

சோர்ந்து அவர் அமர்ந்திடும் நேரத்திலே,
நான் தோள் கொடுத்து தாங்கி கொள்ள ஆசை

ஏதொன்றும் எதிர்பார்க்காமல்,
நட்பு தரும், ஓர் உயிரை தேடுகின்றேன்
நான் தேடும் நட்பினையே தந்திடுவானோ இறைவன்?
நான் சேர்ந்து அழுது, சிரித்திட துணை வந்திடுவானோ ஒருவன்

எழுதியவர் : நிர்மலா மூர்த்தி (நிம்மி) (23-May-14, 7:56 am)
Tanglish : sinna sila aasaikal
பார்வை : 186

மேலே