எங்கே சென்றாயடி

ஏகாந்த வேளையில்
இழுத்தனைத்து
முத்தமிட்டு
சிதை துளைத்து
சிந்தை மயக்கி
தனியோர் உலகில்
எனை தள்ளி விட்டு
மெய் மறந்து
பொய் புகுந்து
சித்தம் கலங்கி
பித்தம் மிகுந்து
மேதாவி நினைப்புடன்
மேதினியில் உலவ விட்டு
எழுத்து தளத்தில்
இரண்டற கலக்க விட்டு
எங்கே சென்றாயடி
என் கவிதை பெண்ணே?
உதிரா கற்பனை
கிடைக்கா கரு
பயங்கொள்ளச் செய்கிறது....
வந்தனைத்து வாழ்த்திச் செல்
கரு கொடு
உயிர் தருவேன்
காகிதத்தில் காவியம் செய்வேன்...
கவிதை மகளே
எனை விலக்கி விட்டாதே.....
எனை அணைத்து முத்தமிடு