சாளர சிறகுகள்----அஹமது அலி----

இருள் கவியும்
இளமாலை நேரங்களில்
=
ஒளிச்செறியும்
அதிகாலை நேரங்களில்
=
கிட்டப் பார்வைக்கு
எட்டிடும் தொட்டிப் பூக்கள்
=
எட்டப் பார்வைக்கு
கிட்டிடும் தென்னை மரங்கள்
=
தென்னங் குரும்பை
கொறிக்கும் அணில்கள்
=
மகிழம்பூ மரத்தில்
மகிழ்ந்திருக்கும் தேன்சிட்டுகள்
=
மாடத்தில் கூடுகட்டி
குடியேறும் சிட்டுக் குருவிகள்
=
மின் மரத்தில் பூத்திருக்கும்
கரும் காகப் பூக்கள்
=
சாளரம் வழி எப்போதும்
ஊடுருவும் ஈக்கள்
=
மசூதி மினராக்களில்
படபடக்கும் மாடப்புறாக்கள்
=
பக்கத்து வீட்டு பாப்பாவின்
பூனை அழுகுரல்
=
தெருவிலோடும் சிறுவர்களின்
விளையாட்டு ரயில்
=
எங்கிருந்தோ வந்து
மேனி போர்த்தும் தென்றல்
=
இவைகளை உணர்ந்தும் பார்த்தும்
சாளரம் வழி மனம் சிறகு விரிக்குதே !

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (26-May-14, 9:12 am)
பார்வை : 338

மேலே