மஞ்சள் வெயில் புதுக்கவிதை

*
மஞ்சள் வெயில்…!!
*
மழை நின்ற பின்
அழகாகவிருந்தது
அந்தி
மஞ்சள் வெயில்
*.
கூடு திரும்பின
இரைதேடி அலுத்தப்
பறவைகள்.
ஆடுகள் மாடுகள்
வீடு திரும்பின
பொழுதோடு
மேய்ந்து வயிறு
நிரம்பிய திருப்தியோடு,
*
வேலைக்குச் சென்றவர்கள்
களைப் போடுத் திரும்பினார்கள்
தேவையானப் பொருட்களை
வாங்கிச் சுமந்து
இரவு உணவு சமைப்பதற்கு,
*
மழை வரும் போல
மேகமூட்டம்
விலகவில்லை இன்னும்,
மழையில் நனைந்து
சுகிக்கலா மென்று
எதிப்பார்த்திருக்கின்ற
மௌன மரங்கள்.
*
விடிய விடிய
பெய்து தீர்த்தது
நள்ளிரவு
தொடங்கிய மழை…!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (26-May-14, 9:10 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 86

மேலே