எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாலிவுட் செல்கிறார் யுவன்ஷங்கர் ராஜா! இந்து மதத்தில் இருந்து...

பாலிவுட் செல்கிறார் யுவன்ஷங்கர் ராஜா!

இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்திற்கு மாறி கடந்த சில மாதங்களாக பரபரப்பு வளையத்திற்குள் சிக்கிய இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா, அதே பரபரப்பு சூழ்நிலையினால், வடகறி படத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பாடல் கொடுக்க முடியாததால் அப்படத்திலிருநதும் தன்னை விலக்கிக்கொண்டார்.

அந்த நேரத்தில் யுவனுக்கு தற்போது பாலிவுட் படங்களில் இசையமைக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால் சில கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையில் இருக்கிறார். அதனால் தமிழில் அவர் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், அது இப்போது உண்மையாகியிருக்கிறது. டிஷ்னி யுடிவி தயாரிக்கும் ஒரு இந்தி படத்திற்கு இசையமைக்க கமிட்டாகியுள்ளார் யுவன்.

குணால் தேஷ்முக் இயக்கும் அப்படத்தில் எம்ரான் ஹஸ்மி நாயகனாக நடிக்கிறாராம். இது இந்தியில் தான் இசையமைக்கும் முதல் படம் என்பதால், இசையில் புதுமை ஏதாவது செய்து பாலிவுட்டை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ள யுவன், தற்போது படத்திற்கு தேவையான பாடல்களை வித்தியாசமாக உருவாக்கியுள்ளாராம். இதே வேகத்தில் மேலும் சில படங்களை கைப்பற்றி கோலிவுட்டில் இருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து முழுநேர பாலிவுட் இசையமைப்பாளராக தீவிரம் காட்டி வருகிறார் அவர்.

நாள் : 29-May-14, 10:05 am

மேலே