சொக்குப் பொடி - நரியனுர் ரங்கு

ஆண் :
ஏண்டி இளங்குயிலே
ஏங்கி நான் சாகணுமா - என்னை
எடுத்துப் புதைக்கணுமா - என்
கல்லறையில் பூப் பறிச்சி - உன்
காதோரம் சூடனுமா ?

ஊர் முழுக்கத் தோரணமா - நீ
ஒருத்தி அங்கு ஊர்வலமா - நான்
ஓரங்கட்டி நிக்கயிலே - உனக்கு
ஒரவிழி நாட்டியமா
நான் ஓஞ்சி மனம் சோரணுமா

பெண் :
சொகுசு சொகுசு மச்சான்
சொக்குப் பொடி எதுக்கு மச்சான்
ஆம்பளைங்க வேசமெல்லாம்
அத்துப்படி எனக்கு மச்சான்

ஆண் :
நபுனா நம்பு புள்ளே
நாள் முழுக்க உறக்கமில்லே
அந்நாடும் உன்ன எண்ணி
அன்னந் தண்ணி இறக்கமில்லே

பெண் :
வெள்ளை வெளுத்த மச்சான்
வெட்டிச் சோறு தின்ன மச்சான்
படிச்சி கிழிச்ச மச்சான் - வேலைக்கு
படியேறிக் களைச்ச மச்சான்
கந்தலா பொழப்பு இருக்க - நமக்கு
காதல் கதை எதுக்கு மச்சான்

நரியனுர் ரங்கு
செல் : 9442090468

எழுதியவர் : நரியனுர் ரங்கு (22-Apr-14, 6:35 pm)
பார்வை : 151

மேலே