சூரியனை கட்டியிழுப்போம் வா

மஞ்சள் நிற சூரியனே
உனைப் பிடிக்க
ஆளில்லா காரணத்தால்
வஞ்சம் கொண்ட மனத்தோடு
வானத்தில் ஆடாதே !
யாம்நினைத்தால்
மஞ்சுலவு வானத்தில்
கவிதை வலையினை வீசி எறிந்து
துஞ்சும் உன்னைப்
பிடித்து
இழுத்து
இங்கே கொண்டுவந்து !
பின்
நெஞ்சுயர்த்தி நின்று சொல்வோம்
நாங்களெலாம் தமிழர் என்று !

விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (22-Apr-14, 8:45 pm)
பார்வை : 111

மேலே