திருவிளையாடல் - தகவல்
நாம் அனைவரும் திருவிளையாடல் படம் பார்த்திருப்போம் அதில் நடிகர் சிவாஜி கணேசன்(சிவ பெருமான்) எழுதக் கொடுத்த பாடல் ஒன்றை நடிகர் நாகேஷ்(தருமி) மன்னனிடம் காட்டுவார். அதற்கு -இயக்குனர் ஏ. பி. நாகராஜன் (நக்கீரர் ) மறுப்பு சொல்லி பொருட் குற்றம் கண்டு பிடிப்பார்.அந்தப் பாடல் இது தான் :
-------------------------------------------------------------------------------------
கொங்கு தேர் வாழ்கை அஞ்சிரைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிய நட்பின் மயில் இயல்
செரி இயற்று அரிவை கூந்தலின்
நரியவும் உளவோ, நீ அறியும் பூவே
-----------------------------------------------------------------------------------------
பொருள் :
எனது முயற்சி தப்புகள் இருந்தால் மன்னிக்கவும்
பஃறொடை வெண்பா :
தேனுண்டு வாழும் அழகுநிறத் தும்பியே
நானுன்னை கேட்குமொரு கேள்விக்கு பொய்தவிர்த்து
உண்மையைச் சொல்வாய் மயில்போன்ற என்னுடைய
பெண்ணின் கூந்தலுக்கு ஒத்ததொரு பூவைநீ
கண்டதுண்டோ சொல்லென்னி டம் !
கருத்து : தேனை உண்டு பூக்கள் தோறும் செல்லும் வண்டே(தும்பியே) உண்மையை மறைக்காமல் சொல்வாய்,
மயிலைப் போல் தோற்றம் அளிக்கும் எனது பெண்ணுடைய (தலைவியின்)கூந்தலுக்கு நிகரான ஒரு பூவின் வாசத்தை எங்கேனும் கண்டதுண்டோ ?
----------------------------------------------------------------------------
-விவேக்பாரதி