மிஸ்ட் கோல் (miss call )

உந்தன் முதல் தொலைபேசி
அழைப்பிலே நீ யார் என்று
கேட்டு நான் தூரம் நின்றேன்
உன்னில் இருந்து .........

நீயோ பதிலுக்கு என்னை
அறிந்தவனாய் பதில் அழித்து
என் பக்கமே நின்றாய்
அன்று என்னோடு ......

உன்னை அறியும் ஆவலில்
ஒரு குறுந்தகவல் அனுப்பி
உன் பக்கமாய் என் மனசையும்
அனுப்பிவிட்டேன் ..........

நீயோ பதிலாய் அனுப்பிய
குறுந்தகவலில் என்னை
யார் என்று அறிய ஆசையா
ஒரு மிஸ்ட் கோல்(miss call )
தாங்க சொல்கிறேன் என்றாய் .........

நான் அனுப்பினேன் மிஸ்ட் கோல்
(miss call )மட்டுமில்லை மனசையும்
இன்கம்மிங் கோலாய்(incomming call )
உன் மனசும் சேர்ந்து வந்தது .....

நிலைத்திருக்கும் சொந்தம்
என்று எண்ணியே உறவாடினோம்
சொந்தங்கள் பிரித்து விடும்
என்பதை அறியாமலே .........

எழுதியவர் : .v.m.j.gowsi (28-Feb-11, 10:43 pm)
சேர்த்தது : m.j.gowsi
பார்வை : 867

மேலே