விதியின் விளையாட்டு24
மனோகரனுக்கு போன் பண்ணி அழைத்த ரிஷானியின் அப்பாவும் அம்மாவும் அங்கிருந்து கிளம்பி உடுப்பி ஹோட்டலுக்கு சென்றனர்....!
10நிமிடத்தில் அவர்கள் 2பேரும் அந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தனர்.......
என்னடா?இப்போதான் சந்திச்சோம் அதுக்குள்ளால வர சொல்லிருக்கா? ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார் மனோகர்????
ஆமாடா! அந்த ஜோசியர் இப்போது திருமணம் எடுக்கக்கூடாது 2வருடங்கள் கழித்துதான் நடத்தவேண்டும் என்று சொல்கிறார்....
அதான் எனக்கு என்ன பண்ணன்னு தெரில....உன்னை அழைத்தேன் என்ன பண்ணலாம் என்று வினவினார்?
இதுக்கு நீயும் உன் மனைவியும் என்ன முடிவு எடுக்குறீங்க என்று கேட்டார் மனோகர்...?
நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை நீதான் சொல்லணும் என்றார்.......
மனோகர் சிறிது நேரம் மௌனமாக நின்றார்.
என்னடா நீ வேற இப்படி மௌனம் சாதிக்கிறாய் இதற்காகவா உன்னை அழைத்தேன் என்று கடிந்தார் ரிஷானியின் அப்பா.......!
உனக்கு நாம் எடுக்க போற முடிவை பற்றி சொன்னால் புரியாதுடா....?நேரில் காண்பித்து புரிய வைக்கணும் என்று சொன்ன மனோகர் தன் மகனுக்கு போன் பண்ணினார்.......!
"நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் பிஸியாக இருப்பதால் சிறிது நேரத்திற்கு பிறகு தொடர்பு கொள்ளவும்" என்று சொன்னது.
மறுபடியும் அழைத்தார் மறுபடியும் தொடர்ந்தது
அதே பதில் .....இதை ரிஷானியின் அப்பாவிடம் சொல்லிவிட்டு......
இப்பொழுது உன் மகளின் போனுக்கு அழைப்பு கொடு என்றார்........!
இப்போ எதுக்கு அவளுக்கு என்று கேட்க?
திருமணத்தை நடத்தணுமா?நிறுத்தணுமான்னு உள்ள பதில் நீ பண்ற அழைப்பில் தான் இருக்கிறது என்று புதிராய் பேசினார் மனோகர்.......???
சரி என்னமோ சொல்றா போன் பண்ணறேன் என்று சொல்லி ஷிவானிக்கு அழைப்பைக்கொடுத்தார்.
அதே பதில் தான் வந்தது...... மீண்டும் மீண்டும் முயற்சித்தார் ஒரே பதில்தான் "பிஸி பிஸி"
கோவத்தில அழைப்பை துண்டித்தவர் யாருடனோ பேசிட்டிருக்கா லைன் கிடைக்கல என்று எரிச்சலாக பதில் கூறினார் ரிஷானியின் அப்பா.........
டேய் பதறாதே இந்த போனில் தான் நம் முடிவே இருக்கிறது என்று மறுபடியும் சொன்னார் மனோகர்.
என்னடா! நீ பைத்தியக்காரன் மாதிரி பேசுறா? என்று கோவப்பட்டார் ரிஷானியின் அப்பா....?
ரிஷானியின் அப்பாவை சமாளித்துவிட்டு பேச ஆரம்பித்தார் மனோஜின் அப்பா மனோகர்.............
இப்பொழுது நம் இரு பிள்ளைகளும் தான் போனில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் அதான் நமக்கு அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.......!
(இப்பொழுதுதான் ரிஷானியின் அப்பாவுக்கு விஷயம் புரிந்தது.)
"அவர்கள் மனதில் ஆசையை வளர்த்துவிட்ட பிறகு இனி திருமணத்தை நிறுத்துவது தவறு"
எனக்கும் ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை அதை எல்லாம் விட்டுத்தள்ளு,,,,,,,,குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நல்ல படியாக நடத்துவோம் என்று சொல்லி அவரை திருப்தி படுத்தினார் மனோகர்..........!
திருமணத்தை இனிதே நடத்தலாம் என்று ஒரு மனதோடு அவர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்..........
அடுத்தநாள் திருமணத்திற்கு வேண்டிய நகை மற்றும் ஏனைய பொருட்கள் வாங்குவதற்காக இருவீட்டாரும் மணமகன் மணமகள் உட்பட அனைவரும் குடும்பத்தோடு காரில் புறப்பட்டு சென்றனர்...........?????