பிறர் வாழ்த்த நாம் வாழ்வோம்

உயிர் வாழ உழைத்திடும்
ஏழை தொழிலாளி
மிஞ்சியதாய் சேர்ப்பது..
ஏக்கம்மிகு கனவுபல...
கால்வயிறு உணவுக்கும்
கண்ணியமாய் உழைத்திருந்தும்
வாழ்வின் முன்னேற்றம்
அடிவயிற்றை காயவைப்பதேனோ..
உடல் வலியை மிஞ்சிடவே
மனதின் வலி நெஞ்சிலிருக்க
ஏற்றம்மிகு வாழ்வு நோக்கி
ஏங்கிடுது பலர் உள்ளம்..
மாற்றம் இல்லா வாழ்வுதனை
எண்ணிதினம் இரத்தம் உருகி
ஏழைகண்ணில் கண்ணீர்மழை
தினம் பொழிய...
இதம் கண்டு நனைகிறது
ஈரமில்லா இதயம் சுமக்கும்
அதிகார வர்க்கமென்னும்
ஆணவ பேய்கள் இங்கு பலநூறு..
மனிதன் கொடுக்கும் வள்ளல்
ஈன்றெடுத்தே இவ்வையம் விட்டு
மாண்டுபோக.. நன்மை விளைக்கும்
மனிதனாக நாளும் வாழ்வோம்..!
...கவிபாரதி...