கைபேசி பேசும்
அவர்கள் காதல் வாழ எங்களை இணைத்தார்கள் ...
கசந்து போய் கானல் நீராய் காதல் மறைய, எங்களைப் பிரித்து இயலாமைக்குத் திரையிட்டார்கள் ..
ஆறறிவு ஜீவன்களின் அவசர வாழ்கையில் ஆருயிர் காதலும் அந்நியமாய் போனது ஆறு மணி நேரம் உயிர் வாழ போராடும் அற்ப ஜீவன்களின் அழுகுரளிலே முடிகின்றது..
காதல் செய்ய தெரியாத மதி கெட்ட மனிதர்களின் கைச்சிறையில் மாட்டித் தவிக்கும் மற்றுமொரு கைப்பேசியின் மரண வாக்குமூலம்