இதயம் விற்பனைக்கு

லப் டப்!! லப் டப்!!
லப் டப்!! லப் டப்!!
நரம்பு பிணையில்
ரத்த சிறையில்
உறையும் உயிரே!! வா வா ....

இதயம் என்று
இதயம் என்று
மடமை கொண்ட
நெஞ்சம் சொல்லும்
அரவே கொஞ்சம்!! வா வா...

செருவை கொண்டு!
கொடுமை கண்டு!
உறவை விண்டு!
விலகும் சதைத்
துணுக்கே கொஞ்சம்!! வா வா...

இனிமேல் நீயும்
இனிமேல் நீயும்
கடை சரக்கே
தனியே வா வா...

உறங்கும் உணர்வை
விற்றால் என்ன?
விற்றால் என்ன??
விற்றால் என்ன ???

உயிராய் உவமை!
உணர்வாய் குருதி!
தெளித்த கவிஞர்
குரல்வளை கொல்லும்
குட்டி சனியே வா வா …

உவமை கொஞ்சம்
உவமை கொஞ்சம்
சிறிதாயின் என்
சினங்கள் எல்லாம் பெரிதே...

உறவை அறுத்து
உணவாய் விதைத்தாய்!
குருதி சேற்றில்
குருதி சேற்றில்
குளிக்கும் கொடுமையே வா வா..

மனிதம் கொன்று!
மனிதம் கொன்றதன்
மகவை தின்ற
மதம் கொண்ட
மனமே மரிக்க வா வா…

கொல்லும் கொடுமை
எமக்கில்லை! வினைக்கு
உன்னை விற்கின்றேன்
இங்கே வா வா...

கடை திண்ணை
நெருக்கும்
பிணந்தின்னி கழுகே
இதயம் இங்கே விற்பனைக்கு…
இதயம் இங்கே விற்பனைக்கு…

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (28-Apr-14, 12:38 pm)
Tanglish : ithayam virpanaikku
பார்வை : 126

புதிய படைப்புகள்

மேலே