தொல் லை காட்சி

தொலைநோக்கு சிந்தனைகள் எல்லாம்
தொலைக்காட்சியில் தொலைந்து போனது
தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றாலே
தொடைகாட்சி இறைச்சி ஆனது
அறிவியலில் தேறியவள் இன்று
சீரியலில் ஊறிவிட்டாள்
ஏரியலை ஏற்றி இறக்கி
தன்ரியலை மாற்றிவிட்டாள்
நயன்தாரா என்னதான் சின்னதாய்
நயம்தாரா?
பயன்தரா சினிமாதான் சொன்னதாய் பயம்தாரா!
படிப்புக்கு வந்த சாதனம்
நடிப்புக்கு போனது
தகவலாய் திகழும் நூதனம்
தரங்கெட்டுப் போனது
தமிழனின் தொன்மை தொலைக்கும்
தொலைகாட்சி தொலை
மனிதனுக்கு நன்மை பயக்கும்
இலக்கியம் படை