+நான் ஒரு கத சொல்லட்டுமா+

நான் ஒரு கத சொல்லட்டுமா...
ம்..
இந்த கதைல.. கதைல..
ம்..
ஒரு டாக் இருந்துச்சாம்...
ம்..
அது.. அது..
ம்..
உங்கள கடிச்சிருச்சாம்..
ஆ.. ஏன்?
ஏனா?
ம்..
ஏனா?
சொல்லு..
அந்த டாக் தான் நானாம்...
அட..
என சுதாரிப்பதற்குள் கடித்துச்செல்லும்
செல்ல மகளுடன் விளையாடுவதா..
இல்லை அலுவலகச் சண்டையை
நெஞ்சில் அசை போடுவதா..