மே தினம் மேன்மை தினம் கீதமன்

இன்று மே தினம்
உழைப்பவர் உங்கள் உன்னதம்
உலகம் உரத்து உரைக்கும் மா தினம்
உழைத்துக் களிக்கும் கண்ணியங்களே
நீங்கள் மண்ணின் மகத்துவம்
உழைத்து உண்ணும் உடன் பிறப்புக்களே
நீங்கள் உயிர் வாழும் சரித்திரம்

உழைப்பில் உண்மை உங்கள் தனித்துவம்
உழைப்பே உயர்வு உங்கள் தத்துவம்
உலகில் உய்யட்டும் உங்கள் உரிமைத்துவம்
உடைந்து வீழட்டும் ஊழ் முதலாளித்துவம்
உலகை ஆளட்டும் உழைப்பவர் சமத்துவம்

இந்து இஸ்லாம் கிறிஸ்தவம்
எம்மதம் ஆயினும் அவர் மதம்
உண்மை உழைப்பைத் தொழுபவர்
உழைப்பின் மதத்தில் ஒரு மதம்

உழைப்பவர் கை உன்னதம்
உழைப்பவர் மெய் மங்களம்
இறைவனும் அதனுள் சங்கமம்
களைத்து வியர்க்கும் ஊன் உடல்
கடவுள் உறையும் ஆலயம்

எழுதியவர் : கீதமன் (1-May-14, 9:58 am)
பார்வை : 266

மேலே