கீதமன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : கீதமன் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 402 |
புள்ளி | : 441 |
கழிப்பறைக் கதவில்
கரப்பான்கள் ஊர்வதர்க்கும் .....
நதிக்கரை நாடி
நாரைகள் நகர்வதற்கும் ...
தேய்ப்பிறை ஊதி
வளர்ப்பிறை வெடிப்பதற்கும்
நோய் நரை கூடி
ஆயுள் அடங்குவதர்க்கும்
உண்டு ....
காரணமிலாக் காரணங்கள்
கொதிக்கும் நீரில்
கொப்புளம் பிறப்பதற்கும்
கொதித்தாறிய பின்
அவை இறப்பதற்கும் ....
துதிக்கும் தெய்வம்
வதைப்பதற்கும்
வதைத்த பின்
அருள் புரிவதற்கும் ....
உண்டு .......
காரணமிலாக் காரணங்கள் ......
மதித்த காதல்
மடிவதற்கும்
மடிந்த பின் மற்றொன்று
மலர்வதற்கும்
முளைத்த நாட்கள்
முடிவதற்கும்
கழிப்பறைக் கதவில்
கரப்பான்கள் ஊர்வதர்க்கும் .....
நதிக்கரை நாடி
நாரைகள் நகர்வதற்கும் ...
தேய்ப்பிறை ஊதி
வளர்ப்பிறை வெடிப்பதற்கும்
நோய் நரை கூடி
ஆயுள் அடங்குவதர்க்கும்
உண்டு ....
காரணமிலாக் காரணங்கள்
கொதிக்கும் நீரில்
கொப்புளம் பிறப்பதற்கும்
கொதித்தாறிய பின்
அவை இறப்பதற்கும் ....
துதிக்கும் தெய்வம்
வதைப்பதற்கும்
வதைத்த பின்
அருள் புரிவதற்கும் ....
உண்டு .......
காரணமிலாக் காரணங்கள் ......
மதித்த காதல்
மடிவதற்கும்
மடிந்த பின் மற்றொன்று
மலர்வதற்கும்
முளைத்த நாட்கள்
முடிவதற்கும்
நாற்பது தாண்டிவிட்டால்
நரம்புகளில் நாட்டியம்
நரை முடிகள் தலை முழுதும்
களவு கொள்ளும் கேவலம்
வைத்த பொருள் வைத்த இடம்
மறந்துவிடும் மாயம்
முன் தைத்த உடை இடை வழியே
வழுகி விழும் அபாயம்
பள்ளியறை பரபரப்பு
அடங்கிவிடும் மயானம்
துள்ளி எழ நாடுவதோ
கொல்லி மலை லேகியம்
சர்க்கரையின் சந்ததிகள்
செல் முழுதும் பத்தியம்
ருசித்த பண்டம் ரசிக்க மட்டும்
வாழ்வே வெறும் சூனியம்
தொண்ணூறு பாகையில்
தோகை விரிக்கிறாள்
முன்னூறு மோகனம்
முழியில் உதிர்க்கிறாள்
எண்ணூறு கவிதைகள்
இதழில் உமிழ்கிறாள்
எனை எமலோகம் காண
எட்டி இழுக்கிறாள் ........
தொண்ணூறு பாகையில்
தோகை விரிக்கிறாள்
முன்னூறு மோகனம்
முழியில் உதிர்க்கிறாள்
எண்ணூறு கவிதைகள்
இதழில் உமிழ்கிறாள்
எனை எமலோகம் காண
எட்டி இழுக்கிறாள் ........
நான் மரணித்த பின் .........
யாரவது கேட்டால் ......
நான் யாரென்று ......
ஒற்றை வார்த்தையில்
என் மனைவி சொல்வாள்
"ரௌத்திரன் " என்று ......
வாரிசுகள் ......
"தரித்திரன் " என்பர் .....
உடன்பிறந்தவர் ...
" இயந்திரன்" என்பர் ......
நண்பர் .....
" விசித்திரன்" என்பர் ........
"அற்புதன் " என்பாள் .....
என் தாய் மட்டும் .....
உயிருடன் வாழ்ந்திருந்தால் .........
எவன்
என்னானால்
எனக்கென்னவென
எவர்க்கோ
எங்கோ
எதையோ
எப்படியோ
எல்லோரும்
எப்போதும்
எந்திரமாய்
தந்திரமாய்
ஆகத்துறத்திப்போவது
அடுத்தவன் போலாகத்தான்
திருமறையும் ஹதீதும் ஜிஹாதுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்படியெனில் இந்த ஜிஹாத் என்பது என்ன?
முஸ்லீம்கள் முஸ்லீமல்லாதவர்களோடு சண்டையிட்டு அவர்களை கொல்வது, தீவிரவாதம், வன்முறை போன்றவைதான் ஜிஹாத் என்று அறியாதவர்கள் நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் ஜிஹாத் என்ற அரபிச்சொல் பல அர்த்தங்களைத் தரவல்ல ஒரு விரிந்த பொருட்செறிவுள்ள சொல்லாக உள்ளது. திருமறையில் இறைவன் விசுவாசிகளைப் பார்த்து:-
(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். (சூரா அல்ஹஜ்ஜூ 22:78)
என்று கூறுகிறான்.
இந்த முறை
மூலை முடுக்கெல்லாம்
முடங்கிக் கிடந்து
முழு உலகையும்
முழுவதுமாய்
முடுக்கி முடக்கும்
முடக்கு வாத
தீவிர வாதமே
வன் தீ பரப்பும்
உன் தீவிரத்தின்
திட்டம் தான் என்ன ????
மதம் பிடித்த
மத மார்கத் தீயில்
மனித உடல் வாட்டி
மாமிசம் மசித்து
மனதாரப் புசித்து
மதத்தின்
மசக்கை வெறி தீர்த்துக்கொள்ளும்
மத வேத
வன் வெறியை
கருவாய் சுமக்கும்
மனம் மரித்த
மனித உரு
வக்கிர
மதக் கர்ப்பிணிகளே!
இன்னும் எத்தனை
வன் மதக் கரு சுமப்பீர்கள் ??
இன்னும்
எத்தனை எத்தனை
வெறி வேத சிசுக்களை பிரசவித்து
உலகில் தவழ விடுவீர்கள் ???
இனமாய் மதமாய்
மொழியாய் ஒன்றாய்
ஓர் உயிராய்
யார் கை யார் மெய்
யாகம் கலைப்பது முதலில் ?//
கைக்கா மெய்க்கா
மோகம் முளைப்பது முதலில் ?/
மெய் கையா கை மெய்யா
விரகம் விதைப்பது முதலில் ?/
பெண் மை நெய்யா ஆண்மை மையா
தாகம் தொடுப்பது முதலில் ?/
முதல் தொடு கை முதல் படு கை
மோக விதையின் முதன் முதல் நடுகை
விழி விடுகை கை பிடி கை
இதழ் இடை இடுக்கில் ஈர் இதழ் இடுகை
கொடி இடை மடிகை விரல் நுனி நனைகை
யாக்கையும் யாக்கையும் சேர்கை இணைகை
தேகப் பலகை படுக்கை விரிக்கை
தேகச் சதையின் முதல் மோட்ச படிகை
உனதும் எனதும் முதல் மெய் சேர்க்கை
காமக் கலப்பையின் முதல் உடல் வயல் உழுகை
காதலும் காமமும் இணை பிரியா இயற்க்கை
வா இர
இரைத் தேடும் பறவைக்கும்
இறை நாடும் துறவிக்கும்
நுரைக் கூடும் கடலலைக்கும்
தரைத் தீண்டும் மழைத் துளிக்கும்
பொதுவானது
முடிவென்பது
முடிவென்பது
முடிவுமில்லை
நிரந்தர முற்றுப் புள்ளி
அதற்க்கு இல்லை
முடியும் இடத்தில்
முடிவு
தொடரும் இன்னோர்
ஆரம்பம்
முடிவின் முனை
முட்ட முட்ட
புது ஆரம்பங்களை
மொட்டவிழ்க்கும்
இயற்க்கை நியதி வட்டம்
ஆரம்பம்
முடிவது தான்
விதி
இன்று மே தினம்
உழைப்பவர் உங்கள் உன்னதம்
உலகம் உரத்து உரைக்கும் மா தினம்
உழைத்துக் களிக்கும் கண்ணியங்களே
நீங்கள் மண்ணின் மகத்துவம்
உழைத்து உண்ணும் உடன் பிறப்புக்களே
நீங்கள் உயிர் வாழும் சரித்திரம்
உழைப்பில் உண்மை உங்கள் தனித்துவம்
உழைப்பே உயர்வு உங்கள் தத்துவம்
உலகில் உய்யட்டும் உங்கள் உரிமைத்துவம்
உடைந்து வீழட்டும் ஊழ் முதலாளித்துவம்
உலகை ஆளட்டும் உழைப்பவர் சமத்துவம்
இந்து இஸ்லாம் கிறிஸ்தவம்
எம்மதம் ஆயினும் அவர் மதம்
உண்மை உழைப்பைத் தொழுபவர்
உழைப்பின் மதத்தில் ஒரு மதம்
உழைப்பவர் கை உன்னதம்
உழைப்பவர் மெய் மங்களம்
இறைவனும் அதனுள் சங்கமம்
களைத்து
நண்பர்கள் (34)

செல்வமணி
கோவை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

அசோக் குமார்
மார்த்தாண்டம்

அனந்தராமன்
Kanchipuram
