காரணமிலாக் காரணங்கள்

கழிப்பறைக் கதவில்
கரப்பான்கள் ஊர்வதர்க்கும் .....
நதிக்கரை நாடி
நாரைகள் நகர்வதற்கும் ...
தேய்ப்பிறை ஊதி
வளர்ப்பிறை வெடிப்பதற்கும்
நோய் நரை கூடி
ஆயுள் அடங்குவதர்க்கும்
உண்டு ....
காரணமிலாக் காரணங்கள்

கொதிக்கும் நீரில்
கொப்புளம் பிறப்பதற்கும்
கொதித்தாறிய பின்
அவை இறப்பதற்கும் ....
துதிக்கும் தெய்வம்
வதைப்பதற்கும்
வதைத்த பின்
அருள் புரிவதற்கும் ....
உண்டு .......
காரணமிலாக் காரணங்கள் ......

மதித்த காதல்
மடிவதற்கும்
மடிந்த பின் மற்றொன்று
மலர்வதற்கும்
முளைத்த நாட்கள்
முடிவதற்கும்
முடிய முடிய
முளைப்பதற்கும்
உண்டு ......
காரணமிலாக் காரணங்கள் .......

பருக்குள் சலம்
வாழ்வதற்கும்
சடுதியில் அவை
மாய்வதர்க்கும்...
உலக உறைக்குள்
நாம் வாழ்வதற்கும்
கல்லறைக்குள்
கரை சேர்வதற்கும்
உண்டு......
காரணமிலாக் காரணங்கள் .........

எழுதியவர் : கீதமன் (1-Jan-16, 4:17 pm)
பார்வை : 80

மேலே