நான் மரணித்தப் பின்
நான் மரணித்த பின் .........
யாரவது கேட்டால் ......
நான் யாரென்று ......
ஒற்றை வார்த்தையில்
என் மனைவி சொல்வாள்
"ரௌத்திரன் " என்று ......
வாரிசுகள் ......
"தரித்திரன் " என்பர் .....
உடன்பிறந்தவர் ...
" இயந்திரன்" என்பர் ......
நண்பர் .....
" விசித்திரன்" என்பர் ........
"அற்புதன் " என்பாள் .....
என் தாய் மட்டும் .....
உயிருடன் வாழ்ந்திருந்தால் .........
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
