விரைவில் உன் வம்சம் துவம்சம் செய்வோம்

விரைவில் உன் வம்சம் துவம்சம் செய்வோம்

மூலை முடுக்கெல்லாம்
முடங்கிக் கிடந்து
முழு உலகையும்
முழுவதுமாய்
முடுக்கி முடக்கும்
முடக்கு வாத
தீவிர வாதமே
வன் தீ பரப்பும்
உன் தீவிரத்தின்
திட்டம் தான் என்ன ????

மதம் பிடித்த
மத மார்கத் தீயில்
மனித உடல் வாட்டி
மாமிசம் மசித்து
மனதாரப் புசித்து
மதத்தின்
மசக்கை வெறி தீர்த்துக்கொள்ளும்
மத வேத
வன் வெறியை
கருவாய் சுமக்கும்
மனம் மரித்த
மனித உரு
வக்கிர
மதக் கர்ப்பிணிகளே!
இன்னும் எத்தனை
வன் மதக் கரு சுமப்பீர்கள் ??
இன்னும்
எத்தனை எத்தனை
வெறி வேத சிசுக்களை பிரசவித்து
உலகில் தவழ விடுவீர்கள் ???

இனமாய் மதமாய்
மொழியாய் ஒன்றாய்
ஓர் உயிராய்
இந்தியராய்
இணைந்து இனிக்கும்
நம் பாரதத்துள்
உள்ளிருந்தே
உண்ட வீட்டுக்கு
இறன்டகம் இழைத்து
நேருக்கு நேர்
நேர் நின்று நமை
நெருங்கி
வெல்ல முடியா
முதுகுத் தண்டு வேரறுந்த
ஆண்மைத் தண்டு செயலிழந்த
இரண்டும் கெட்டான்
அண்டை நாடுகளுக்கு
தனத்திற்காக
தாய் நாட்டை
தாரை வார்த்து
உடன்பிறப்புக்களின்
உதிரத்தையே உறிஞ்சி
தாகம் தணியும்
தாசி குலத்து
தீவிரவாத தூசிகளே ......
இன்னும் எத்தனை உயிர்கள் மாய்ப்பீர்கள்??
இன்னும் எவ்வளவு உதிரம் உறிவீர்கள்?/

புனிதப் போர்
எனும் போர்வையில்
கோர்வை கோர்வையாய்
மனித உயிர் வேரறுக்கும்
தீவிரவாதமே ........

புனித மார்கத்தின்
மத வழி தவறி
தீவிர வாதத்தின்
குத வழி பயணித்து
குதர்க்கம் குரைத்து
வழி வழியாய்
உயிர்ப் பலி கொள்ளும்
தீவிரவாத வம்சமே........

உன் தீயில் தீய்ந்து
மண்ணில் புதைந்து
விண்ணில் ஒய்ந்த
ஒரு பாவமும் அறியா
அப்பாவிப் புனித
பூதவுடல்களின்
வழி
வம்சமாகிய நாம்
உன்
வன் வம்ச
வன்ம விதைகளை
துவம்சம் செய்வோம்
வெகு
விரைவில்
நிரந்தரமாய்
நிச்சயமாய் .. .........................

எழுதியவர் : கீதமன் (3-May-14, 4:49 pm)
பார்வை : 58

மேலே