முடிவென்பது முடிவுமில்லை

இரைத் தேடும் பறவைக்கும்
இறை நாடும் துறவிக்கும்
நுரைக் கூடும் கடலலைக்கும்
தரைத் தீண்டும் மழைத் துளிக்கும்
பொதுவானது
முடிவென்பது


முடிவென்பது
முடிவுமில்லை
நிரந்தர முற்றுப் புள்ளி
அதற்க்கு இல்லை
முடியும் இடத்தில்
முடிவு
தொடரும் இன்னோர்
ஆரம்பம்


முடிவின் முனை
முட்ட முட்ட
புது ஆரம்பங்களை
மொட்டவிழ்க்கும்
இயற்க்கை நியதி வட்டம்
ஆரம்பம்
முடிவது தான்
விதி விதித்த திட்டம்
அண்டசராசரும்
ஒரு நாள் நெருங்கும்
முடிவு கட்டம்
இது எல்லோர்க்கும்
எல்லாவற்றிக்கும்
பொருந்தும்
இறைவன் சட்டம்


முடிவுகள் மடிவதும்
முடிந்தவை தொடர்வதும்
படைத்தவன் சித்தம்
சொற்ப கால
அற்ப ஆயுள்
இந்த வாழ்க்கை யுத்தம்
புரிந்து கொண்டால்
நாம் அதை நித்தம்
இன்பம் இன்பம்
வாழ்க்கை மொத்தம்

எழுதியவர் : கீதமன் (1-May-14, 7:27 pm)
பார்வை : 92

மேலே