எல் நினோ வந்திடுமோ
கறுப்பு பணம்
கையூட்டு
சொத்துக்குவிப்பு
விலையேற்றம்
மக்கள் பெருக்கம்
காடழிப்பு
கற்பழிப்பு
பணவீக்கம்
வேலையின்மை
பொய்யான அரசியல்
போலியான சாமியார்
சில்லறை வணிகம்
சினிமா மோகம்
இப்படியாய்
பாவப்பட்ட பாரதம்
பரிதவிக்கும்
வேளையில்
"எல் நினோ"
எனும் அரக்கன்
இந்தியாவை தாக்குமாம்
பருவமழை பொய்க்குமாம்
வறட்சி துய்க்குமாம்...
விளைச்சல் இல்லாமல்
விலைவாசி பறக்குமாம்.....
விழி பிதுங்கி நிற்கும் விவசாயி
உயிர் பிதுங்கும்
அவலம் தொடருமோ?
பசிப் பஞ்சம் பல்கி
பாரதப் போர் மூளுமோ?
வறுமை கோடு தடித்து
வாழ்வாதாரம் தொலைத்து
இர(ற)ந்து வாழும்
இழுக்கு வந்து சேருமோ?
ஆட்டி படைக்கும் அச்சம்
உறக்கம் குடித்ததே மிச்சம்....