தொழிலாளி முதலாளி

இயக்குவான் முதலாளி
இயங்குவான் தொழலாளி
உழைப்பால் வியர்வை துளிகள்
உயர்வால் குளிர் சாதனத்தில் வியர்வை துளிகள்
உழைப்பு தொழிலாளியின் மூலதனம்
தொழிலாளி முதலாளியின் மூலதனம்
முதலாளி பணத்தை பார்ப்பான்
தொழிலாளி குணத்தை பார்ப்பான்
உழைப்பால் அமைதியான உறக்கம்
பணத்தால் உறங்க மாத்திரைகள் ..
தொழிலாளியின் ஊதியம் அடுப்பு ஊத
முதலாளியின் ஊதியம் புகையை ஊதி தள்ள
உழைப்பு என்றும் நிலைத்து நிற்கும்
பணம் பறந்து போய் விடும்
உழைப்பால்
வலிமை
மன உறுதி
மன அமைதி
பணத்தால்
பகட்டு
பயம்
மன அழுத்தம்
உழைப்பின் வலிமைக்கு தலை வணங்குவோம்