அவசரம் அவசரம்
அலாரத்தை அனைக்க அவசரம்
அரை குறை குளியலுக்கு அவசரம்
அன்னத்தை அள்ளி போட அவசரம்
அன்றாடம் பேருந்தை பிடிக்க அவசரம்
அலுவலக பணியை முடிக்க அவசரம்
ஆறு மணிக்கு சிக்னலை கடக்க அவசரம்
அறுசுவை உணவை இரவில் படைக்க அவசரம்
அனைத்தையும் முடித்து உறங்க சென்றால்
உறக்கம் இறக்கம் காட்டவில்லை..
கவலைகள்
கவலைகள்
கவலை படுவதிலும் அவசரம் ..
அவசர உலகிலிருந்து விடை பெற்று இறந்தேன்
சுற்றி இருக்கும் கூட்டத்தின் ஒலிகள் ..
எம கண்டம் வந்துடும்
சீக்கிரம் எடுங்கப்பா !!!!!
அதிலும் அவசரம் !!!!!!