அவர்கள்
அவர்கள்
நன்றாகவே அறிந்திருந்தார்கள்
அது எப்போது அரங்கேறுமென்று
ஒரு வேலையுமில்லாத
தெரு நாய்போல்
ஒரு இடமும் தங்காமல்
அலைந்தார்கள்
இருவர் இருவராய்
மூவர் மூவராய்
கூடிக் கூடிக் கிசுகிசுத்தார்கள்
தாழிடாத கதவுகளுக்குப் பின்னால்
தூங்குவது போல்
நடித்தார்கள்
கொள்ளையடித்தவன்
கொஞ்சமாய் கொடுப்பதாய்
கருவிக் கொண்டார்கள்
நிறைய கொடுத்தவனை
மனமுருக வாழ்த்தி
கொள்ளையடிக்கச் சொன்னார்கள்
கொள்ளை போவது எல்லாம்
தமதென்று அறியாமல்
கவலையோடு
காத்திருக்கிறார்கள்
எப்போது வரும்
அடுத்த தேர்தலென்று.
எழுதியவர். சகுவரதன். குடியாத்தம்.