Ramajayam - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Ramajayam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 151 |
புள்ளி | : 51 |
அனைத்திலும் அரசியல் அறிந்திடு
ஆதிக்க உணர்வை வெறுத்திடு
இல்லாதோர்க்காய் உழைத்திடு
ஈகை குணத்தை வளர்த்திடு
உண்மை உழைப்பை போற்றிடு
ஊழல் சூழல் போக்கிடு
எளிமை நெறியை கற்றிடு
ஏளனம் செய்தல் மறந்திடு
ஐக்கிய மாதல் உரைத்திடு
ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு
ஓய்தல் நீக்கி செயல்படு
ஓளடதம் நீயென எண்ணிடு
அஃதே அரசியலென மாற்றிடு.
@ திருவாளர். சுப்ரா வே சுப்பிரமணியம் ஐயாவிற்கு
அழுது தீர்த்துவிடு
அக்கா குருவியே
ஆழ்மனதின்
அத்தனை ராகத்தையும் ....
நீயமர்ந்து பாட
மிச்சமேதுமின்றி
பச்சைமரங்கள்
மொத்தமாய்
தொலைந்திருக்கக்கூடும்
நாளை ...!
மரங்களை வெட்டி
உங்களோடு
எங்கள் வாழ்வையும்
பழாக்கிப் பழகிய
மனிதனுக்கு ...
தன்சக மனிதத்தலைகளும்
தேவைப்படுகிறது
அவ்வப்போது
தன் வஞ்சம் தீர்க்க...!
------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்
.
இசை முரசு’ நாகூர் ஹனீபா மரணம்!
பிரபல பாடகர் நாகூர் இ.எம்.ஹனீபா இன்று(08.04.2015) உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் நிகழ்ந்தது.அவருக்கு வயது 90.
இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் 1925 டிசம்பர் 25 ஆம் நாள் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனீபா. இஸ்மாயில் முஹம்மது ஹனீபா என்பது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனீபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது. இசை உலகில் பிரபலமானவுடன் ‘இசைமுரசு’ எனும் அடைமொழியும் அப்பெயரோடு இணைந்தது. சிறு வயதிலிருந்தே ஹனீபா பாடத் தொடங்கி விட்டார்.
1941 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேரிழந்தூரில் ஒரு திருமண நிகழ்வில் இசைக்கச்சேரி செய்ய ஹனீபாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. வெளியூர் சென்று இசைக் குழுவினருடன் ஹனீபா செய்த முதல் கச்சேரி அது. முறையாகப் பணம் பெற்றுக்கொண்டு செய்த கச்சேரியும் அதுவே.
ஹனீபா முறையாக சங்கீதம் கற்றவர் அல்லர். அவரது எடுப்பான குரல் இயற்கையாகவே அமைந்தது. 1954 இல் அவரது பாடல்கள் இசைத் தட்டில் பதிவாயின.
ஹனீபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சில திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார்.
1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கச்சேரிகள் செய்துள்ளார். எந்த இசைக் கலைஞரும் செய்யாத அரிய சாதனை இது. உலக நாடுகள் பலவற்றிலும் ஹனீபாவின் இசை முழக்கம் அரங்கேறியுள்ளது. ஹனீபா பாடிய பாடலான ‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல் முஸ்லிம்கள் மட்டுமின்றி இதர மதத்தவர்களின் வீடுகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக்கழகத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். பல கட்சிப் பாடல்களையும் பாடியுள்ளார்.காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹிப், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நேசத்திற்குரியவர்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கிறேன்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஹூன்
அவரின் சிம்மக் குரலில் மிகவும் பிரபலமான இரண்டு பாடல்கள் இங்கே!
ஜெயகாந்தனும் மறைந்துவிட்டார்
ராஜாஜியின் மறைவு குறித்து ஆனந்த விகடனில் தனது இரண்டு பக்கங்
களில் எழுதியிருந்தார்
பிண்ட தொந்தம் உள்ளவர்களுக்கு மரணம் ஆற்றவொண்ணா துயரம்
எனக்கென்ன பிண்ட தொந்தம். ஏன் துயரம் நெஞ்சை அடைக்கிறது
கண்கள் குளமாகிறது ?
இது இதய தொந்தம். எண்ணத்தில் உன் எழுத்தினால் நீ உருவாக்கிய
பாச பந்தம்.
மண்ணில் பிறந்தவன் யாராயினும் ஒரு நாள் மரணத்தைத் தழுவித்தான்
ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி.
நீ எழுத்தாளன் இறந்துவிடவில்லை மறைந்துவிடவில்லை (...)
தண்ணீராய் செலவு
இல்லை இல்லை
தண்ணீருக்கே பெரும் செலவு,
ஓடி ஒளியலாம்
இன்னும் சில நாளில்
யாரேனும் தண்ணீர் கேட்டு வருகையில்.
திரண்டு வந்து
திரும்பும் மேகம்
தகுந்த மரியாதை கிடைக்கவில்லையோ.
யாரைக் கண்ட மிரட்சி
வந்தவழியே
திரும்பிச் செல்கிறது மேகம்.
கை பிடித்து நடக்கின்றார்
பிள்ளைகள் அன்று
தண்ணீர் பாட்டில்.
காத்திருக்கிறார்கள் எல்லோரும்
வி வி ஐ பி - ஆனது
மழை.
முந்நூறு நானூறு
பல நூறுக்கு பின்னுமில்லை
சொட்டுத் தண்ணீர்..
எல்லாருக்கும் பிடிக்கும்
நம் காதல் - வா
பட்டாம் பூச்சியின் சிறகாவோம்
மனம் சோர்ந்தால் பார்
பூக்கள் மட்டுமா முள்ளிலும்
சிறகசைக்கும் பட்டாம்பூச்சி
ஏதேதோ எழுதினேன்
பொருந்தி வந்ததென்னவோ
பட்டாம்பூச்சி காதலுக்கு
பட்டாம்பூச்சியே சொல்
சிறகசைப்பில் உதிரும்
வண்ணங்களா பூக்கள்
ஒவ்வொரு தோல்வியிலும்
சிறகசைத்து பறக்கும்
என் கனவு பட்டாம்பூச்சி
வரைந்திட முடியவில்லை
எத்தனை வண்ணங்கள் குழைத்தும்
மனம் கவர் பட்டாம்பூச்சி
நல்லா படிக்கிறவங்க
டீச்சர் வீட்டுக்கு வரலாம்
இருந்தும் பட்டாம்பூச்சியின் பின் மனம்
உலகப் பூக்களை
ஒன்றாக விழுங்கினால் வருமா
பட்டாம்பூச்சி கவிதை
மொட்டை மாடி நிலா
முகம் மறைத்தது மேகத்துள்
குழந்தை முகம் கண்டு
மழை வெறுத்துப்போனது
ரசிக்க யாரும் மில்லை
கணினியில் குழந்தைகள்
நீண்டு செல்லும் பேச்சு
ஆடவந்ததை மறந்து
அமர்ந்தே தூங்கும் குழந்தைகள்
நீ அகம் மகிழ்ந்து
சிரிக்கையில்
உன் எண்ணங்களை பிரதிபலித்து
சிரிக்க...
நீ
மனம் வெதும்பி குளுங்கி
அழுகையில்
உனது துயரை
என்னுள் வாங்கி நானும்
அழ...
உனது அசைவுகள்
எல்லாம
எனது அசைவுகளாய்
நொடிக்கு நொடி
காட்டி மயங்க...
உன் உதைப்பை
ஏற்று
மறுபடி உதைக்காது
நொறுங்க
உன்னை
வெறுமைக்கு அப்படியே
பிரதிபலித்து
நொறுங்கிப்போக
கண்ணாடிப் பொருளா...
எமக்கான மனம்
எமக்கான சிந்தனை
எமக்கான செயல்
உமக்கானது போல்
எமக்கென சிலவும்
உண்டென
எப்போது எப்போது
அறிவாய் என்னை
சொல் நீ?
அலுவலக கோப்புகள்
அழுத்திய மனசையும்
கணினி களத்தில்
களைத்த கண்களையும்
நெரிசலில் கசங்கிய
நெஞ்சையும், அனுதினம்
பொசுங்கும் வாழ்வையும்
பொதியென சுமந்து
கடற்கரை வந்தேன்
கண்தவம் புரிந்தேன்
கீழ்வானச் சிவப்பில்
லயித்திருக்கும் பிறைநிலவை
கிள்ளி எடுத்துவந்து
கீற்றுக்குள் வைத்தேன்
தொடுவானம் சரிந்து
கடல்வீழும் சங்கமத்தை
அள்ளி எடுத்துவந்து
கீற்றின்பின் விரித்தேன்
சிறகாடி வட்டமிடும்
இரைதேடும் பறவையை
கணப்பொழுது நிற்க சொன்னேன்
பிறைநிலவின் அருகே
உறவாடு உறவாடு
உறவாடு என காற்று
மரத்தோடும் மனதோடும்
விரித்தாடும் சிறகை
கண்சொன்னால் கேட்காதா
யாரேனும்
நல்ல கவிதை
கேட்டால் சொல்வேன்
மரம்.
நீண்டு வளர்ந்து
இருள் பரப்பி
நிற்கும்
மரம்போல்
நீள் கவிதை
வேறெது.
யாரால்
எழுத இயலும்
மரம் போல்
ஓர்
நல்ல கவிதை
இயற்கைத் தவிர.
தடுத்து விட்டது
வெள்ளை சட்டை
குழந்தையின் சிநேகம்.
உயிர்த்தெழுந்தார்
தேர்தல் தினத்தில்
இறந்து போன தாத்தா.
இடம் பொருள் ஏவல்
நானும் பிற்பட்டவன்தான்
பீகாரில் மோடி.
சொல் பார்க்கலாம்
இணையில்லா கவிதை
அம்மா.