பச்சை மரங்கள்
அழுது தீர்த்துவிடு
அக்கா குருவியே
ஆழ்மனதின்
அத்தனை ராகத்தையும் ....
நீயமர்ந்து பாட
மிச்சமேதுமின்றி
பச்சைமரங்கள்
மொத்தமாய்
தொலைந்திருக்கக்கூடும்
நாளை ...!
மரங்களை வெட்டி
உங்களோடு
எங்கள் வாழ்வையும்
பழாக்கிப் பழகிய
மனிதனுக்கு ...
தன்சக மனிதத்தலைகளும்
தேவைப்படுகிறது
அவ்வப்போது
தன் வஞ்சம் தீர்க்க...!
------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்
.