என்ன உலகமடா இது
ருசி கொண்டு போதையில்
விழுந்தவனைக் கண்டு
விலகிச் செல்லும் மனிதர்கள்..
பசி கொண்டு பாதையில்
விழுந்தவனைக் கண்டும்
விலகிச் செல்கின்றனர்....
கடும்பஞ்சம் கண்டு
கையேந்தும் பிஞ்சினை
தட்டிச் செல்லும் மனிதர்கள்..
கருஞ்சிலை கண்டு
காய்கனி அபிஷேகம்
செய்கின்றனர்....
நாணயமற்று அலைகின்றனர்
அச்சிட்ட நாணயங்களுக்காக..
இதில் நான் மட்டும்
என்ன விதிவிலக்கா..??
வெறும் விதியை நம்பி வாழும்
செங்குருதி ஓடும் மனிதன்தான்...
என்னையும் சேர்த்துதான்
"என்ன உலகமடா இது"....
செ.மணி