மணல் வீடு

அருகிலிருக்கும் உறவுகள் கூட
தொலைவில் இருப்பதாய் தோன்றுகிறது
நிலவில் இருக்கும் வெளிச்சம் கூட
விடிவதற்குள் என் சோகம் சொல்ல துடிக்கிறது
அனைத்தும் இருந்தும் அனாதையாகிறேன்
காதல் இருந்தும் கவிதை மறக்கிறேன்
துன்பம் இருந்தும் சொல்லாது விடுகிறேன்
காகிதக்கப்பலாய் கடலினுள் கரைகிறேன்
எப்போது விடியும் என் வான் சூரியன்

அதோ......
என் வாழ்க்கை.....
நேற்று நான் கட்டி விட்டு வந்த கடற்கரை மணல் வீடாக
இன்னும் சில நாட்களே...

எழுதியவர் : அபிராமி ராஜா (6-Apr-15, 6:29 pm)
சேர்த்தது : அபிராமி ராஜாஹ்
Tanglish : manal veedu
பார்வை : 234

மேலே