யாருமில்லை -கார்த்திகா
அது ஒரு ,
மொட்டை நிலாக் காலம் ..
சிதறி விழுந்த
கண்ணீர்த் துளி வறண்டு
சருகாகிய இலைகளை
துளிர்க்கப் பார்த்தது
சாளரத்தின் வழி
எட்டிப் பார்த்த
மின்மினிகளின் சாடல்,
விண்மீன்கள் ஒளி
பருகியது என்று
ஆந்தையொன்று அலறுகிறது
கேட்பார் யாருமின்றி
கானம் கரைகின்றதோ?
சொற்களை நெருக்கிப்
பிடித்து மொழியில்
கோர்த்தபோது எழுத்துக்கள்
இரவலாய்ப் போனதுண்டோ
யாருமற்ற அநாதை வெளியில்
காற்றின் ஓசையைக் கிழிக்கும்
உயிரின் அலறலில்
நிழல்களைத் தீயிட்டுக்
கருக்கிக் கொண்டிருந்தேன் நானே!!