முதல் மோட்சம்
யார் கை யார் மெய்
யாகம் கலைப்பது முதலில் ?//
கைக்கா மெய்க்கா
மோகம் முளைப்பது முதலில் ?/
மெய் கையா கை மெய்யா
விரகம் விதைப்பது முதலில் ?/
பெண் மை நெய்யா ஆண்மை மையா
தாகம் தொடுப்பது முதலில் ?/
முதல் தொடு கை முதல் படு கை
மோக விதையின் முதன் முதல் நடுகை
விழி விடுகை கை பிடி கை
இதழ் இடை இடுக்கில் ஈர் இதழ் இடுகை
கொடி இடை மடிகை விரல் நுனி நனைகை
யாக்கையும் யாக்கையும் சேர்கை இணைகை
தேகப் பலகை படுக்கை விரிக்கை
தேகச் சதையின் முதல் மோட்ச படிகை
உனதும் எனதும் முதல் மெய் சேர்க்கை
காமக் கலப்பையின் முதல் உடல் வயல் உழுகை
காதலும் காமமும் இணை பிரியா இயற்க்கை
வா இரண்டறக் கலப்போம்
இனி வேண்டாமே தணிக்கை