காதல் கண்ணாமூச்சி

எத்தனையோ பேருந்துகளை
விட்டுவிட்டு
உனக்காக நான் காத்திருக்கையில்
வரும் முதல் பேருந்தில்
நீ ஏறி சென்று...
உன்னை பார்ப்பதற்காகவே
உன் இடத்தை கடந்து செல்கிறேன்
என்பதை அறிந்தும் நீ
என்னை அலட்சியப்படுத்துவது போல்...
எங்கோ நான் பார்த்துக்கொண்டிருக்கையில்
என்னை நீ
இமைக்காமல் பார்த்துக்கொண்டு
என் பார்வை
உன்மேல் படும்போது மட்டும்
எங்கோ உன் பார்வையை திருப்பிக்கொண்டு...
ஏனடா விளையாடுகிறாய்
என்னோடு இந்த
காதல் கண்ணாமூச்சி...