தொலைத்தது எதுவென மலைத்தேன்

காணாமற் போன
பந்தினைத் தேடினேன்
தானாக முன்வந்து
உதவினாள் ஒருத்தி
நீட்டிய வெண்கர
வெண்டை விரல்கள்
என்னைத் தொட்டதில்
மெய்யது சிலிர்த்தேன்.

தூளியில் படுத்து
தூங்காமல் படுத்தும்
திருட்டுக் குழந்தையின்
உருட்டு விழிகளாய்
தூக்கம் தொலைத்ததில்
கனவும் தொலைந்திட
ஏக்கம் மட்டுமெ
எகிறிக் குதித்திட

பேரக் குழந்தைகள்
போட்ட பந்தினை
பிடிக்கத் தெரியா
பாவிக் கிழவன்
தொலைத்தது எதுவென
மலைத்து நிற்கிறேன்.

உண்மையில் தொலைத்தது
பந்தா, பாவையா?
தூக்கமா கனவா?
வயதா வயோதிகமா?

ஐயயோ பிள்ளைகள்
எங்கே தொலைந்தார்கள்!.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (2-May-14, 2:13 pm)
பார்வை : 115

மேலே