கருத்திலே பூத்தது காண்க- 187918- சந்தோஷ்குமார் கவிதை
கருத்திலே பூத்தது!! காண்க- 187918- சந்தோஷ்குமார் கவிதை!!
கைகூடாக் காதல் கனவிலும் துன்புறுத்தும்;
பொய்கூடா வாழ்க்கை புவியினிலே – மெய்கூடின்
வாழ்க்கை கவிதை! வருப விருதுகள்!
சீழ்க்கையுடன் எல்லாம் சிலிர்ப்பு!
கனவோ உறக்கத்தின் காற்பகுதி! தூக்கம்
தனிலே இருத்தல் தகுமோ? –மனிதா!
விழித்தால் எழவேண்டும்! வேதனை ஏனோ?
கொழித்தால் எதுவுமிலா வாழ்வு!
எல்லாம் கடக்கும் இதயம் துடிப்பதுவும்
நல்லாம் செயலென்று நம்பு.படைப் –பெல்லாம்
பலவிதமே! செய்யும் பயணம் தொடரின்
நலமே என,இருக்க நாடு!
=== ++ ===