கருத்திலே பூத்த்து- காண்க கிருத்திகா தாஸின் -191639-
கருத்திலே பூத்த்து!!- காண்க கிருத்திகா தாஸின் -191639-!!
காற்றை அழைத்தாலும் கற்றைக் குழல்சுகத்தை
நேற்றுப் பிரிந்ததுயர் நெஞ்சுவிட்டு நீங்கலையே!
வெப்பச் சூரியனும் விளக்காக வருகின்றான்!
ஒப்புக்கே! உனைப்போல உடலுக்கோ இதமிலையே!
வழியில் நெருஞ்சிமுள் வந்தாலும் தவிர்த்திடுவேன்!
விழியில் நெருஞ்சிவைத்து விட்ட,நீர் குத்துதடீ!
சோகத்தை உள்வைத்துச் சிரிப்பினையே வெளிக்காட்டி
மேகத்துள் நிலவைப்போல் முன்,நிற்கும் உன்முகமே!
தாகத்தை எனக்குள்ளே தவிர்த்திடுமோ ஏழுகடல்?
மோகத்தை விட,ஏழு மலைகளுந்தான் உயர்ந்திடுமோ?
வெளிக்குத் துணையாக விட்டுவிட்டேன் தனிமையினை!
ஒளிக்குத் திரையிட்டு ஓடினவே விண்மீன்கள்!
துளிர்த்த செடிபோலத் தூரத்துக் காடிருக்கும்!
புளித்த தயிராகப் புதுவானம் எதிரிருக்கும்!
ஒளிக்க எதுவுமில்லை! உயிரெனக்குள் இல்லையடீ!
களிக்க எதுவுமில்லை! காசெனக்குப் பெரிதுமில்லை!
அழித்துவிட நினைவில்லை அடியே!உன் உயிரெனக்குள்!
குளித்தெதிரே நீவரல்போல் கூடவரும் திரும்புமட்டும்!