ஏழை

ஏழை
யார் சொன்னது எதுவும் இல்லாத
பஞ்சன் என்று

நிலவு ம் எட்டி பார்க்கும்
இவன்(இவர்கள் ) வீட்டை
விருந்தாளியாக ...


வாடை காற்றும் -இவன்(இவர்கள்) வீட்டு
வா டைதான் தேடி வரும்

கொசுக்களுக்கு இரத்தம் கொடுக்கிற
கர்ணன் இவன் (இவர்கள்)

வறுமை ஒழிப்பு என்ற பெயரில்
இவனை(இவர்களை) வளர்த்து வாழ்கிற அரசியல்

கவினுக்கு கவிதை
கிடைக்கிற ஊற்று

கொச்சை தமிழா இருத்தாலும்
கொஞ்சமாவுது தமிழ் வாழ்வது -இவன் (இவர்கள் )
வீட்டில் தான்........

எழுதியவர் : (2-May-14, 6:29 pm)
Tanglish : aezhai
பார்வை : 124

மேலே