நண்பனே எழுந்து வா

நண்பனே எழுந்து வா !!!

நீ படைத்த நெஞ்சுரம் உன் எதிரிகில்லை எழுந்து வா
நீ நடக்கும் பாதையில் தடை ஏதுமில்லை எழுந்துவா
நீ படைத்த வேகம் வீசும் கற்றுக்கில்லை எழுந்துவா
நீ வெற்றி கொள்ளாத திசைகள் இல்லை எழுந்துவா
நீ கொண்ட அன்பிற்கு ஈடு இல்லை எழுந்துவா
நீ பெற்ற திறம் சொல்ல வார்த்தை இல்லை எழுந்துவா
உன் அறிவின் செரிவினிலெ ஊனமில்லை எழுந்துவா
உன்னுள்ளே ஆற்றல் பல ஊற்றெடுக்கும் எழுந்துவா
நீ நினைத்தாள் உலகினையே மாற்றிடலாம் எழுந்துவா
புது உலகே உனக்காக உண்டாக்கி எழுந்துவா
- - -அருள்.ஸ்ரீ -----

எழுதியவர் : ARULSHRI (6-May-14, 5:41 pm)
பார்வை : 253

மேலே