ஏ தோழா

ஏ தோழா ...!
ஏன் தோல்விகளைக் கண்டு
அனலிடைப் பட்ட
புழுவாய் துடிக்கின்றாய் ... ?

உளூத்துப் போன உலகத்தின்
வசை கண்டா ...?

ஓரறிவு பெற்ற
மரங்கள் கூட ...
மீண்டும் துளிர்ப்போம்
எனும் நம்பிக்கையில்
இலையுதிர்க்கும் போது ...
ஆறறிவு பெற்ற உனக்கு
ஏனிந்த அவநம்பிக்கை ...?

எல்லாம் உன்னால்
செய்ய முடியும்...!

ஏன் ...?
தண்ணீரைக் கூட ...
சல்லடையில் அள்ள முடியும் .

அது உறையும் வரை
நீ ... ...
காத்திருந்தால் ...!

காத்திரு தோழா ... காத்திரு ...
காலம் வரும் வரை
காத்திரு...

***

எழுதியவர் : சுந்தர. இராமதாஸ் (6-May-14, 5:11 pm)
Tanglish : yae thozhaa
பார்வை : 135

மேலே