மதில் மேல் பூனை
பூத்த நறுமலர்கள் மாலைக்கா சாலைக்கா
காத்த செல்வம் உயர்வுக்கா அழிவுக்கா
காட்டிய பாதை அமைதிக்கா அழிவுக்கா
வேண்டிய வரம் இம்மைக்கா மறுமைக்கா
சாடிய வழக்கு என்ன சாதகமா பாதகமா
நாடிய தீர்ப்பு நம் வெற்றியா தோல்வியா
தேடிய ஊற்றுநீர் ருசி குடிநீரா உப்புநீரா
ஓடிய தண்ணீர் நெல்லுக்கா விழலுக்கா
மூடிய கையில் கருங்கல்லா கனகரத்தினமா
மீட்டிய வீணை மெல்லிசையா அபஸ்வரமா
என்றைக்கும் ஒற்றையா ரெட்டையா குழப்பம்
ஆடு புலி ஆட்டம்தான் நம் மூர்ச்சை வரைக்கும்