RAMADASS - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : RAMADASS |
இடம் | : SALEM |
பிறந்த தேதி | : 17-Feb-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 02-May-2014 |
பார்த்தவர்கள் | : 51 |
புள்ளி | : 10 |
நான் ...
நானாக இருந்தவரை
நானாவே இருந்தேன் ...
நீ ...
நீயாக இருந்தவரை
நீயாகவே இருந்தாய் ...
நீயும் ...நானும் ...
சேர்ந்து
நாம் ...
ஆன பின்
நீ ... மட்டும்
நீயாகவே ...
இருப்பது எப்படி...?
நெடு துயிலுக்கு
நித்தம்
ஒரு
ஒத்திகை ...
பேச நினைப்பதை
பேசாமலே ...
பேசும் மொழி ...
ஏ இளைஞனே...!
என்ன
உன் முகத்தில்
இத்தனைக் கோடுகள்...?
உனைச் சூழ்ந்துள்ள
அச்சக் கோடுகள்
இது தானா...?
உனக்கு
ஏனிந்த தயக்கம்...?
முரண்பாடுகளைக் கண்டு
முடங்கி விடாதே...
முடுக்கிவிடு
உன்
சிந்தனைச் சிதறல்களை...
ஏளனங்களை எதிர் கொள்...
அதை
ஏணிப்படிகளாக்கிக் கொள்...
உனக்குத் தெரியுமா...?
"இழந்த சொர்க்கம்" எனும்
இறவாப் புகழ் பெற்ற
இலக்கியத்தை மில்டன்
இயற்றியது
இரு கண்களையும்
இழந்த பின் தான்...!
ஈறாயிரத்துக்கும் மேலான
அறிவியல் கண்டுபிடிப்புக்களை
எடிசன் கண்டுபிடித்தது
செவித் திறனை இழந்த
பின் தான்...!
எதுவும் நிலையில்லா
இவ்வுலகில் உன்...
இப்போதைய நிலை மட
சூரியன்
தன் முகம் காண ...
புல்மேல் வைத்த
கண்ணாடி ...