ஏ இளைஞனே
ஏ இளைஞனே...!
என்ன
உன் முகத்தில்
இத்தனைக் கோடுகள்...?
உனைச் சூழ்ந்துள்ள
அச்சக் கோடுகள்
இது தானா...?
உனக்கு
ஏனிந்த தயக்கம்...?
முரண்பாடுகளைக் கண்டு
முடங்கி விடாதே...
முடுக்கிவிடு
உன்
சிந்தனைச் சிதறல்களை...
ஏளனங்களை எதிர் கொள்...
அதை
ஏணிப்படிகளாக்கிக் கொள்...
உனக்குத் தெரியுமா...?
"இழந்த சொர்க்கம்" எனும்
இறவாப் புகழ் பெற்ற
இலக்கியத்தை மில்டன்
இயற்றியது
இரு கண்களையும்
இழந்த பின் தான்...!
ஈறாயிரத்துக்கும் மேலான
அறிவியல் கண்டுபிடிப்புக்களை
எடிசன் கண்டுபிடித்தது
செவித் திறனை இழந்த
பின் தான்...!
எதுவும் நிலையில்லா
இவ்வுலகில் உன்...
இப்போதைய நிலை மட்டும்
நிலையாகுமோ...?
நீ...
நீ...
நினைத்தால்
நினைத்ததை
நிஜமாக்க முடியும்...!
உன் இலக்கினை
நிர்ணயித்துக் கொள்...
அதை நோக்கி
ஒவ்வொரு அடியும்
தொடரட்டும்...
எதிர்படும் தடைக் கற்களை
தகர்த்தெறி...
உன்னை ...
தரணி போற்றும்
நீ...
ஒரு எடுத்துக்காட்டாவாய்...!